வெள்ளகோவிலில் மாதத்தில் 15 நாட்கள் செயல்படாத நூலகம்

X
வெள்ளகோவில் உப்பு பாளையம் சாலையில் கிளை நூலகம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள ஒரே நூலகம் இதுவாகும். திருப்பூர் மாவட்டம் நூலக ஆணைக் குழுவின் கீழ் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் 12.30 மணி வரையும், மதிய உணவு வேலைக்குப் பிறகு 3:00 மணி முதல் 5.30 மணி வரையும் வேலை நேரமாகும். ஒரு நூலகர் பணியில் இருக்கும் நிலையில் முறையாக நூலகம் திறக்கப்படாமல் அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. இதனால் வாசகர்கள் வந்து பார்த்து ஏமார்ந்து திரும்பிச் செல்கின்றனர். எனவே நூலகம் முறையாக அனைத்து வேலை நாட்களிலும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

