விருத்தாசலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர்
Virudhachalam King 24x7 |5 Sep 2024 5:55 PM GMT
போக்சோ வழக்கு பாய்ந்தது
விருத்தாசலம் அருகே உள்ள இரு சாலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் விஜய் (28). இவர் கம்மாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை தனக்கு முறைப் பெண் உறவுமுறை எனக்க கூறி சிறுமியை குழந்தை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் சிறுமியல பலமுறை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் சிறுமி தற்போது 9 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி வந்துள்ளது. இதனால் அவரை ஆலடி புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் இதுகுறித்து சிறுமிக்கொடுத்த புகாரின் பேரில் விஜய் மீது போக்சோ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story