சேலத்தில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை
Salem King 24x7 |12 Jan 2025 10:13 AM GMT
ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 53), ஆட்டோ டிரைவர். இவர் 15 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு நேற்று முன்தினம் மறைவான பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது அந்த சிறுவனிடம் ஞானபிரகாஷ் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் சத்தம்போட்டு கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா, சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஞானபிரகாசை நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் தாதகாப்பட்டி பகுதியில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சு தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story