தென்காசியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதல்! 15 பேர் காயம்

தென்காசியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதல்! 15 பேர் காயம்
அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதல்! 15 பேர் காயம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் மாட்டுச்சந்தை முக்கு பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் எதிரில் வந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களில் பயணம் செய்த 15 பேருக்கு மேல் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story