பரமத்திவேலூரில் ரூ.15½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.

X
Paramathi Velur King 24x7 |21 Feb 2025 8:38 PM ISTபரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.15½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.
பரமத்திவேலூர், பிப்.21- பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 598 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.142.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ.128.19-க்கும், சராசரியாக ரூ.140.11-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக 5.115,99-, குறைந்தபட்சமாக ரூ.105.19-க்கும், சராசரியாக ரூ.112.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 700-க்கு வர்த்தகம் நடை பெற்றது.நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 25 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.145.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.121.55-க்கும், சராசரியாக ரூ.142.99-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.118.88-க்கும், குறைந்தபட்சமாக ரூ.98.38-க்கும், சராசரியாக ரூ.116.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 66 ஆயிரத்து 256-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story
