15 வயது சிறுமி திடீர் மாயம் சிறுவனுடன் மீட்பு

X
குமரி மாவட்டம் கிள்ளியூரில் ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளியில் படித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு செல்வதாக தனது பெற்றோர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து உடனடியாக பெற்றோர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிரமியை தேடி வந்தனர். இதற்கு இடையில் சிறுமியின் மொபைல் நம்பரை வைத்து லொகேஷன் பார்த்தபோது கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் சிறுமி இருப்பது கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்திய போது ஒரு வீட்டில் வாலிபர்வருடன் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் காதலித்து வருவதும், ஆனால் அந்த வாலிபருக்கு 16 வயது மட்டுமே ஆன சிறுவன் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இருவதையும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

