கொல்லிமலை சுற்றுலா சென்ற வேன் சாலையின் வளைவில் கவிழ்ந்து விபத்து 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

X

கொல்லிமலை சுற்றுலா சென்ற வேன் சாலையின் வளைவில் கவிழ்ந்து விபத்து 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ராசிபுரம் அருகே கொல்லிமலை சுற்றுலா சென்ற வேன் சாலையின் வளைவில் திரும்பும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று விட்டு மாலை தனது சொந்த ஊர் நோக்கி கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சி வழியாக செல்லும் சாலை மார்க்கம் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி அருகே உள்ள மூலக்குறிச்சி வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள வளைவில் வேன் அதிவேகமாக திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நபர்களை பொதுமக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக ஆயில்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Next Story