சேலம் குரங்குச்சாவடியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

சேலம் குரங்குச்சாவடியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
X
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சேலம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது வீட்டில் 15 பவுன் நகை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பீரோவை திறந்து நகையை பார்த்துள்ளார். அப்போது நகை திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார். அதில் வீட்டில் வேலை செய்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story