ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் பீகார் சேர்ந்த இளைஞர் கைது

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்  பீகார் சேர்ந்த இளைஞர் கைது
X
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் பீகார் சேர்ந்த இளைஞர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் பீகார் சேர்ந்த இளைஞர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை ஓரிசாவில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ஹவுரா விரைவு ரயில் இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது அப்போது ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் நிக்கில் குமார் குப்தா தலைமையிலான பாதுகாப்பு படையினர் அந்த ரயிலில் சோதனை செய்தனர்.அப்போது அந்த ரயிலில் சந்தேகத்தின் பேரில் பயணம் செய்த ஒரு இளைஞரின் பையை சோதனை செய்த போது அந்த இளைஞர் பையில் 15 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர்.பின்னர் விசாரணை செய்த போது அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தன்குமார் கேவாட் என்பது தெரியவந்துள்ளது. 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த இளைஞர்ரை பிடித்து விசாரணை நடத்தி பின்னர் சென்னை அம்பத்தூரில் உள்ள மது விலக்கு அமலாக்கத்துறை யினரை வரவழைத்து அந்த இளைஞரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story