தடைமீன்பிடி தடைகாலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது!

X

தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது.
தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம்தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வருகிற 14ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும். இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 258, தருவைகுளத்தில் 245, வேம்பாரில் 36 என மொத்தம் சுமார் 539 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. இதனால் மீன்கள் மீன் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story