நீலகிரி மாவட்டம் கிறிஸ்தவ மக்களின் தவக்கால பரிகார பவனி மலைப்பாதையில் 15 கிலோ மீட்டர் தூரம் சிலுவை சுமந்து வந்தனர்
நீலகிரி மாவட்டம் கிறிஸ்தவ மக்களின் தவக்கால பரிகார பவனி மலைப்பாதையில் 15 கிலோ மீட்டர் தூரம் சிலுவை சுமந்து வந்தனர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய பங்கு மக்கள் சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் பர்லியாரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் அங்குள்ள புனித செபஸ்தியர் ஆலயத்திலிருந்து கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் சிலுவை சுமந்து தவக்கால பரிகாரப் பவனி எனும் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது இதில் பர்லியார் புனித செபஸ்தியர் ஆலயத்தில் இருந்து இயேசு சீடர்கள் அன்னை மரியாள்,படையாளிகள் என வேடம் அணிந்து, சிலுவை சுமந்து இயேசு குறித்த பாடல்களை பாடியவாறு நடந்து வந்தனர்.இறுதியாக குன்னூர் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
Next Story




