அரியலூர் நகரத்திலுள்ள வணிக நிறுவனங்களில் மே 15} -க்குள் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்

அரியலூர், ஏப்.22- அரியலூர் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15}க்குள் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையர்(பொ)அசோக்குமார் தெரிவித்தார். அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தெரிவித்தது: அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ்ப்பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் மற்ற மொழி எழுத்துகளைவிட பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும். பெயர்ப் பலகை தமிழில் அமைப்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது முதல் முறை அபராதமும், 2 ஆம் முறை முரண்பாடு கண்டறியப்படின் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.கூட்டத்தில், துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ, அரியலூர் நகர வணிகர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story

