சிவகிரில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

சிவகிரில் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
X
15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் 36. இவர் புளியங்குடியில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அதற்கு வரி நிர்ணயிப்பதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை அணுகினார்.அவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். தர விருப்பமில்லாத காளிராஜன் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அகமது உமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story