கோவை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 15 நாள் பயிற்சி முகாம் நிறைவு!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் 15 நாள் பண்பு பயிற்சி முகாம் கோவையில் நிறைவு பெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் 15 நாள் பண்பு பயிற்சி முகாம் கோவையில் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில், பயிற்சி பெற்ற தொண்டர்களின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வந்த தொண்டர்கள் பார்ப்போரை பரவசப்படுத்தினர். பண்பு பயிற்சி முகாமில் தேசப்பற்று, ஒழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறைவு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story