குன்னமலை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் திறப்பு.

குன்னமலை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் திறப்பு.
X
குன்னமலை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூர்,மே.23:    நாமக்கல் மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டிபாளையத்தில் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் நிதியில் கவுண்டிபாளையம், பெருமாபட்டி, பொம்மக்காபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 252 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பாட்டிற்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையும் மற்றும் குன்னமலை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, எம்.எல்.ஏ. சேகர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story