இலங்கைத் தமிழர் வீட்டில் 15 பவுன் நகை பணம் கொள்ளை

X
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்தி நகரில் ஓம் சக்தி கோவில் தெருவில் வசித்து வருபவர் மேகலா இலங்கைத் தமிழரான இவர் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தவர் அங்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து மேகலா வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முக்காடு உடை அணிந்த இருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்வது பதிவாகி இருந்தது இதனைத் தொடர்ந்து அதே கும்பல் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

