கல்லாத்தூர்- தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 வருட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

கல்லாத்தூர்- தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 வருட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
அரியலூர் மே.29- ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 வருட முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லாத்தூர்- தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2010 ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ரேணுகா வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பூவண்ணன், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராஜகோபால், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் கவரப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம், சிலம்பூர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் ஆசிரியர் ரேவதி, தமிழ் மாறன், முன்னாள் ஆசிரியர்கள் ராஜேந்திரன் எழிலரசன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட போது தங்களது வாழ்க்கை, குடும்பத்தினர் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான வெண்பலகைகள் வழங்கினர். மேலும் இறந்த ஆசிரியர்கள் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் இறுதியில் முன்னாள் மாணவர் நன்றி கூறினார்.
Next Story