ஏலகிரி மலை கிராமங்களில் 15 புதிய மின்மாற்றியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதிய மின்மாற்றியை துவக்கி வைத்த எம் எல் ஏ
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் புதிய 15 மின் மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை கிராம ஊராட்சி பகுதிகளில் உயர் மின் அழுத்தம் கொண்ட மின் மாற்றி அமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ஏலகிரி மலை பல்வேறு ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் 63 KVA திறன் கொண்ட 15 மின்மாற்றிகளையும், இதுவரை ஏலகிரி மலை முழுவதும் ஒரு மின்பாதையில் 2 DP switchகள் மட்டும் இயங்கி வந்ததையடுத்து, தற்போது புதிய 7 DP switch-களையும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிகளில் செயற்பொறியாளர் பாஷா முகமது, உதவி செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கோமதி, பரந்தாமன், மாவட்ட பிரதிநிதி பொன்னுரங்கம், மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் அருண்பாண்டியன், ராஜ்குமார், ரவி, தனலட்சுமிசங்கர், தங்கவேல் மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது
Next Story