இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோருக்கு 15 லட்சரூபாய் மதிப்பீட்டில் உணவுக்கூடம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

உதவிகள்
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திராநகரில் கடந்த 1984 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் தப்பி தமிழகம் வந்தவர்கள் குடி அமர்த்தப்பட்டனர் தாயகம் திரும்பியோர் என அழைக்கப்பட்ட இவர்களுக்கு தாயகம் திரும்பியோர் அறக்கட்டளை வேண்டுகோளின்படி பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வப்போது தமிழகஅரசு மற்றும் வங்கி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ரெப்கோ வங்கி சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள கூட்ட அரங்கில் மேல்மாடியில் உணவுகூடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது இந்த உணவு கூடத்தை ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் மற்றும் இயக்குனர் தங்கராஜ் திறந்து வைத்தனர் மேலும் தாயகம் திரும்பியவர்களுக்கு சுயதொழில் புரியும்வண்ணம் 3 லட்சரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகள் என மொத்தம் 15 லட்சரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டன விழாவில் அன்னை இந்திராநகர் தாயகம் திரும்பினோர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
Next Story