கோவை: கூடுதல் லாபம் தருவதாகக் கூறி 1.5 கோடி மோசடி !

X
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரி புவியரசிடம், அவரது உறவினரான ரம்யா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்டோர், மகளிர் சுய உதவி குழு மூலம் அதிக லாபம் தருவதாக கூறி முதலீடு வாங்கினர். 2023 முதல் பல கட்டங்களாக புவியரசு ரூ.1.64 கோடி வரை முதலீடு செய்துள்ளார். பின்னர் பணம் தேவைப்பட்ட புவியரசு தன்னை ஏமாற்றியதை உணர்ந்தார். அவரின் புகாரின் பேரில், ரம்யா கடந்த ஜூன் 3ல் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த நடராஜனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து மோசடி செய்ததுடன், புவியரசை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

