ரூ 15 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைத்ததால் மக்கள் மகிழ்ச்சி

மன்னர்குடி நகரத்தில் புதிய மின் மாற்றிகள் அமைப்பு
மன்னார்குடி சக்தி மரவாடி தெரு மற்றும் காசுக்கார செட்டி தெரு பகுதிகளில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி உதவி செயற்பொறியாளர் முனைவர் சம்பத் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. மேற்படி பகுதிகளில் வீட்டு மின் நுகர்வோர்கள் மற்றும் அந்த பகுதியில் நிலவிய குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தனர்.அதனை தொடர்ந்து சுமார் 15 லட்சம் செலவில் இந்த மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் இளமின் பொறியாளர் க. கண்ணன் பொதுமக்கள், மின் வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story