ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

X
தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான இலவச வீட்டு மனை பட்டா பதிவு செய்தல், புதிய ரேஷன் அட்டை, மருத்துவ காப்பீடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பதிவு செய்தல், முதியோர் உதவித்தொகை பெறுவது, சுய உதவி குழு கடன் பெறுவது, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்று உள்ளிட்ட அரசு சார்ந்த சான்றிதழ்கள் இம் முகாம் மூலம் பெற்றுக்கொள்ள சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் கலைஞர் உரிமைத் தொகை பெறாத பெண்களுக்கு இம்முகாமின் மூலம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது ஆகையால் நடைபெறவுள்ள இந்த முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் ஒன்றாவது வார்டு கருணாநிதி நகர் பகுதி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
Next Story

