ஓமனில் 1.5 கோடி ரூபாய் மோசடி – கோவை இளைஞர் கைது !

X
ஓமன் நாட்டில் எலக்ட்ரானிக் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்த கோவை இளைஞர், 1.5 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்த யூனஸ், ஓமனில் கடை நடத்தி வருகிறார். அக்கடையில் 2021-ல் வேலைக்கு சேர்ந்த அவரது மருமகன் முகமது சமீர், விற்பனை மற்றும் பண பரிவர்த்தனைகளை பொறுப்பாக பார்த்து வந்தார். அந்நிலையில், வெறும் கையொப்பம் செய்யப்பட்ட செக்குகளை பயன்படுத்தி, மேலும் வங்கி பரிமாற்றங்கள் மூலமாக, 2021 முதல் 2024 வரை சுமார் 1.5 கோடி ரூபாயை மோசடி செய்து இந்தியாவில் உள்ள தனது கணக்கிற்கு மாற்றியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து யூனஸ் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கரும்புக்கடை பள்ளிவீதியை சேர்ந்த முகமது சமீர் (32) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

