சிவகாசி மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்குப் பின் சாலை அமைக்கப்பட்டதால் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பொதுமக்கள்

X
சிவகாசி மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்குப் பின் சாலை அமைக்கப்பட்டதால் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பொதுமக்கள்.... சிவகாசி மாநகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி 3-வது தெருவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள நிலையில், அனைத்துத் தெருக்களிலும் சாலை அமைக்கப்பட்டு, 3-வது தெருவில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளாக சாலை அமைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக புகார் தெரிவித்த நிலையில், 15- ஆண்டுகளுக்கும் மேலாக சாலையே இல்லாத தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக முனீஸ்வரன் காலனி 3-வது தெருப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி தங்களது வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதே நேரம் கழிப்பறை சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். பேட்டி:- அமல் ராஜ்- முனீஸ்வரன் காலனி
Next Story

