அக். 15ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

X
Komarapalayam King 24x7 |13 Oct 2025 7:04 PM ISTஅக். 15ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் சங்ககிரியில் நடக்கவுள்ளது.
குமாரபாளையம், அக். 14 அக். 15ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் சங்ககிரியில் நடக்கவுள்ளது. இது குறித்து செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக். 15ல் முற்பகல் 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
