வீட்டில் இருந்த பெண்ணை அடித்து உதைத்து 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளை

X
கீரனுார் குளத்துார் பெருமாள் கோயில் பகு தியில் வசிப்பவர் பாலு, கொத்தனார்.-இவரது மனைவி லட்சுமி(52). இரவு வீட்டில் தனியாக இருக்கும் லட்சுமியை நோட்டமிட்டு காரில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் வீட்டு பின்புற கதவு வழியே உள்ளே நுழைந்து, மின்சாரம் துண்டித்து லட்சுமியை அடித்து உதைத்து கழுத்தில், காதில் இருந்த செயின், தோடு, மூக் குத்தி, 2 பீரோவை உடைத்து 9 பவுன் என 15 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் பணம் கொள்ளையடித்து காரில் தப்பி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கீரனுார் போலீசா ரிடம் புகார்செய்தனர். அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பகலில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 6 பவுன் நகை கொள்ளை, ஸ்கூட்டரில் சென்ற பெண் ணிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு என தொடர் திருட்டு, கொள்ளையால் மக்கள் பீதியில் உள்ளனர்.
Next Story

