போர்வெல் பிட் தயாரிக்க பயன்படும் கார்பன் தட்டுப் பாட்டால் பிட் விலை 15 நாளில் 2 மடங்கு உயர்வு இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் ரிக் உரிமையாளர் சங்கத் தலைவர் பேட்டி

போர்வெல் பிட் தயாரிக்க பயன்படும் கார்பன் தட்டுப் பாட்டால் பிட் விலை 15 நாளில் 2 மடங்கு உயர்வு இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் ரிக் உரிமையாளர் சங்கத் தலைவர் பேட்டி
X
போர்வெல் பிட் தயாரிக்க பயன்படும் கார்பன் இறக்கு மதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் பிட் விலை 15 நாளில் 2 மடங்கு உயர்வு இதற்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் இதனால் போர்வெல் கட்டணம் 20 சதவீதம் உயரும்மத்திய அரசு உடனடி தீர்வு காண வலியுறுத்தி போர்வெல் வாகனங்கள் இயங்காமல் போராட்டம்
தமிழகம் முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. பல வாகனங்கள் வெளி மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குள் போர்வெல் போட பயன்படுத்தும் பிட் என்ற பொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து வந்த இந்த பொருள் தற்போது 55 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிட் செய்ய தேவைப்படும் கார்பன் என்ற மூலப்பொருள் வருவது தடைபட்டுள்ளது தான் எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்தியா முழுவதும் ஆங்காங்கே போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தேனி கரூர் திருப்பூர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 2000க்கும் மேற்பட்ட ரிக் எனப்படும் போர்வெல் வாகனங்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறும் போது கடந்த 15 நாட்களில் ரிக் வாகனத்திற்கு தேவைப்படும் பிட் இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி உரிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த பிட்டிற்கு மூலப் பொருளாக சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்பன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது எனவே பிட்டின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது இந்த தடையை நீக்கி மத்திய அரசு ரிக் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் காவல்துறையும் ரிக்கு வாகனங்கள் தொடர்பான வழக்குகள் விவகாரங்களில் எங்களுக்கு துணை நின்று எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 19 கோடி ரூபாய் வரியாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறோம். அதேபோன்று மத்திய அரசுக்கு 240 கோடி ரூபாய் டீசல் வழியாக வழங்கி வருகிறோம். எங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை போர்வெல் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட செவி சாய்ப்பதில்லை என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சினைகள் காரணமாக தற்போது போர்வெல் போடுவதற்கு சற்று விலை அதிகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விலை உயர்வு 20 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிய வருகிறது தேனி கரூர் போன்ற மாவட்டங்களில் தற்போது 20 சதவீத விலை உயர்வுடன் போர்வெல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள போர்வெல் வாகனங்கள் தங்கள் போர்வெல் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது .
Next Story