ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15 அடி பள்ளத்தில் வயல்வெளியில் தனியார் மில்வேன் கவிழ்ந்து விபத்து 3 பேர் காயம் அடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி.....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15 அடி பள்ளத்தில் வயல்வெளியில் தனியார் மில்வேன் கவிழ்ந்து விபத்து 3 பேர் காயம் அடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் இருந்து மகாராஜபுரம் நோக்கி தனியார் மில் வேன் வேலைக்கு 3 பணியாட்களை மட்டும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.அப்போது எதிர்பாராத விதமாக கூமாபட்டி மூலக்கரை கண்மாய் சாலையின் ஓரத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் வயல்வெளியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் சரவணன் (18),பணியாட்களான காதுல் (43) , காந்திமதி (39 ஆகிய மூன்று பேர் காயமடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கூமாபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கூமாபட்டி - வத்திராயிருப்பு சாலையில் மூலக்கரை கண்மாய் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உடனே சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

