சத்தி சப் - ரிஜிஸ்டர் ஆபிஸில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் பறிமுதல்

சத்தி சப் - ரிஜிஸ்டர் ஆபிஸில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் பறிமுதல்
சத்தி சப் - ரிஜிஸ்டர் ஆபிஸில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் பறிமுதல் சத்தி ஆற்றப்பாலம் அருகே அத்தானி ரோட்டில், சப் - ரிஜிஸ்டர் ஆபிஸ் செயல்படு வருகிறது. இங்குபத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் வழங்வது உள்ளிட்ட பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர். சப்- ரிஜிஸ்டர் ஆபிசில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து சத்தி சப் - ரிஜிஸ்டர் ஆபிசில் ஆய்வு குழு அலுவலர் ஜெகநாதன் மற்றும் இலஞ்ச ஒழிப்பு துறைஇன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பத்திரங்கள் குறித்து சோதனை செய்து பின் வெளியே அனுப்பி வைத்தனர். மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும்,தெரிவித்து சென்றனர்
Next Story