காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 150வது கலந்துரையாடல் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவி களின் தனித் திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் இன்று நடைபெற்ற 150 வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் உலகில் உள்ள 7 கண்டங்களில் 6 கண்டங் களில் உள்ள உயரமான மலைகளை கடந்த ஒன்றரை வருடங்களில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 75 கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் 75 பள்ளி மாணவ மாணவிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே பேசிய மலை யேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி தன்னுடைய மலையேற்ற நிகழ்வுகளின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மாணவர் களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் பேசிய மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி பெண் குழந்தைகளுக்கும் பெற்றோர் களுக்கும் நட்புணர்வு வேண்டும் எனவும் அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனடியாக குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள் என்றார். மேலும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை முழுமையாக தடுக்க பெற்றோர்கள் குழந்தை களிடம் நட்புடன் இருக்க வேண்டும் எனவும் வரும் தலைமுறை குழந்தை களுக்கு LKG வகுப்பிலேயே ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குழந்தை பருவத்தி லேயே சொல்லிக் கொடுக்கும் போது வரும் காலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை முற்றிலுமாக தடுக்கப்படும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலையேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி வரும் ஏப்ரல் மாதம் 7 வது கண்டமாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மவுண்ட் டெனாலி என்ற உயரமான சிகரத்தில் ஏறி சாதனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சாதனையின் மூலம் 2 ஆண்டுகளில் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் விரைவாக ஏறியதாக இந்தியாவில் முதல் பெண் என்ற சாதனையை படைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதனை தொடர்ந்து உலகில் உள்ள 7 கண்டங்களில் இருக்கும் உயரமான எரிமலைகளில் 60 நாட்களில் ஏறிய உலகில் முதல் பெண் என்ற சாதனையை படைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த சாதனையை ஏற்கனவே ஆண்கள் 70 நாட்களில் ஏறி சாதனை செய்து உள்ளதாகவும் பெண்கள் 185 நாட்களில் இந்த சாதனையை செய்து இருப்பதாகவும் இந்த இரண்டு சாதனையை முறியடித்து 60 நாட்களில் இந்த சாதனையை படைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த சாதனைக்காக 1 கோடியே 50 லட்சம் தேவைப்படுவ தாக மலையேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி தெரிவித்தார். மேலும் தமிழகத்தை பொறுத்த வரையில் மற்ற விளையாட்டு களுக்கு ஸ்பான்சர் கிடைப்பது போல் மலையேற்ற விளையாட்டுக்கு யாரும் ஸ்பான்சர் அளிப்பதில்லை என தெரிவித்த முத்தமிழ்ச்செல்வி தமிழகத்திலும் மலையேற்ற விளையாட்டுக்கு அனைவரும் ஸ்பான்சர் செய்து ஊக்குவிக்க வேண்டும் என்றார்
Next Story



