முருகன் கோவிலில் 150திருமணங்கள் நடைபெற்றது

முருகன் கோவிலில் 150திருமணங்கள் நடைபெற்றது
திருத்தணியில் இன்று சுபமுகூர்த்த தினத்தில் 150 திருமணங்கள் நடைபெற்றது முருகன் கோயிலில் மட்டும் 80 திருமணங்கள் நடைபெற்றதால் சாமி தரிசனத்திற்கு திருமண வீட்டிற்கு திரண்ட பக்தர்கள் இரண்டு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் வியாபார அடிப்படையில் அதிக திருமணங்களை மலைக்கோவில் வரை நிர்வாகம் ஏற்படுத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி திருமண புகைப்படங்களும் ஆகம விதிகளை மீறி கோயில் வளாகத்தில் எடுக்கப்படுவதால் இது கோயிலா அல்லது சுற்றுலா பூங்காவா என்று கேள்வி? எழுப்பிய பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வைகாசி மாதத்தை முன்னிட்டு முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி மலைக்கோயில் அடிவாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது இதனால் திருத்தணியில் அரக்கோணம் சாலை ரயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் என்பதால் இந்த திருக்கோயிலில் இன்று வைகாசி தினத்தின் 73 திருமணங்களும் மேலும் அனுமதியில்லாமல் மலைக்கோயில் வளாகத்தில் செயல்படும் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றதால் மலைக்கோவிலில் திருமண வீட்டிற்கு வந்தவர்களும் மற்றும் மலைக்கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்தவர்களும் கடும் வாகனம் நெரிசல் 2 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்தனர் போதிய போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இருந்தும் போலீசாரே திணறும் சூழ்நிலை வாகன நெரிசலால் ஏற்பட்டது போதிய பார்க்கிங் வசதிகளும் மலைக்கோவிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது வியாபார ரீதியாக மலைக்கோயில் வரை காவடி மண்டபம் போன்ற பகுதிகளில் அதிக திருமணங்களை அதிக கட்டணங்களை புரோக்கர்கள் வசூலித்துக் கொண்டு நடத்துவதால் திருமணம் முடிந்த திருமண மணமகன் மணமகள் ஆகியோர்கள் திருக்கோயில் வளாகத்தில் ஆகம விதிகளை மீறி பூங்காக்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வது போல் கோயில் வளாகத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர் இது கோயில் வளாகமா அல்லது பூங்காவா சுற்றுலாத்தலமா ஏன் இப்படி கோயில் நிர்வாகம் வியாபார ரீதியாக அதிக திருமணங்களை மலைக் கோவிலில் நடத்தி சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றனர் என்று கேள்வி? எழுப்பிய முருக பக்தர்கள் வரும் காலங்களில் இது போல் தவறுகள் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கையை இந்து சமய அறநிலைத்துறை எடுக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
Next Story