ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில்b
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்., தங்களது அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட என்.சண்முகசுந்தரபுரம் பகுதியில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 600 க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் உள்ளனர். இந்த என்.சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் குடிநீர் வசதி, வாறுகால் வசதி,சுகாதார வளாகம் வசதி, மயானக்கரை வசதி, அரசு பள்ளிக்கு செல்லும் பாதை வசதி உள்ளிட்டவைகள் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனக் கூறியும் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சண்முகசுந்தராபுரம் விலக்கு பகுதியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள்,ஆண்கள் தங்கள் அன்றாட கூலி வேலை பணிகளுக்கு செல்லாமல் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் வாக்காளர் அட்டை,குடும்ப அட்டையை ஏந்தியவாறு சாலையில் அமர்ந்து ஸ்டாலின் அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து வந்த அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அரசு அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்.சண்முகசுந்தரபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தங்கள் கிராமத்திற்க்கு ஒரு வார காலத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் தங்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து வீடுகள் முழுவதும் கருப்பு கொடிகள் கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று என்.சண்முகசுந்தரபுரம் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : செல்லப்பாண்டி ( ஊர் நாட்டாமை )
Next Story