வீட்டில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்
X
நாகர்கோவில்
நாகர்கோவில் கோட்டார் கீழ சரக்கல்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை அந்த வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து சோதனை செய்தபோது, அதில் சாக்கு பைகளில் சுமார் 150 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை கைப்பற்றி கோட்டாறு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வீட்டின் உரிமையாளர் யார்? இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story