ராசிபுரம் அருகே 150 ஆண்டு பழமையான புளிய மரத்தை ஆசிட் ஊத்தி அழிக்க முயற்சி: கிராம நிர்வாக அலுவலர் இடம் புகார் மனு

ராசிபுரம் அருகே 150 ஆண்டு பழமையான புளிய மரத்தை ஆசிட் ஊத்தி அழிக்க முயற்சி: கிராம நிர்வாக அலுவலர் இடம்  புகார் மனு
X
ராசிபுரம் அருகே 150 ஆண்டு பழமையான புளிய மரத்தை ஆசிட் ஊத்தி அழிக்க முயற்சி: கிராம நிர்வாக அலுவலர் இடம் புகார் மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த 85.ஆர்.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(78) இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் அந்த நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு சேலம் பகுதியை சேர்ந்த சித்துராஜ் என்பவருக்கு விற்பனை செய்த நிலையில் அவர் குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார்.இந்த நிலையில் அவர் அங்கு வீட்டுமனை அமைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் நிலத்திற்கு செல்லும் வழியில் 150ஆண்டு பழமை வாய்ந்த புளிய மரம் ஆனது அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மரத்தை அகற்ற ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்குரிய அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தங்கவேல் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகளை 3 பேரை பயன்படுத்தி புளிய மரத்தின் மேல் பகுதியில் மர கிளைகளை வெட்டி அதில் ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு செல்வதற்குள் 3 நபர்கள் தப்பி சென்றதாகவும், பழனியப்பன் பிள்ளாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி அவர்களிடம் புகார் மனு அளித்திருந்தார். புகார் மனுவை பெற்ற விசாரணைக்கு சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி பார்வையிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.வீட்டு மனைகள் விற்பனை செய்வதற்காக 150 ஆண்டு பழமையான புளிய மரத்தில் ஆசிட் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது..
Next Story