ஆயுத பூஜையை ஒட்டி விவேகானந்தா மகளிர் கல்லூரியில்150 பேருந்துகளுக்கு பூஜை செய்து மாணவிகள் வழிபாடு

நாடு முழுவதும் வரும் ஒன்றாம் தேதி புதன்கிழமை விஜயதசமி நாளை ஒட்டி ஆயுத பூஜை நடக்க உள்ள நிலையில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உள்ள நூற்றி ஐம்பது பேருந்துகளுக்கும் ஆயுத பூஜை செய்து மாணவிகள் வழிபாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
பெண்களை தெய்வமென போற்றி வழிபடும் நமது நாட்டில் சக்தி வடிவமாக கருதப்படும் பெண்களை வழிபட ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் இருந்து கொலு வைத்து கொண்டாடி பத்தாம் நாள் விஜயதசமி என திருவிழாவாக கொண்டாடி வாகனங்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் வீடுகளில் வாழை மரம் மாவிலை பூதோரணங்கள் கட்டிவழிபாடு செய்வார்கள் அடுத்த நாள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் வகையில் வீட்டில் உள்ள குழந்தைகளின் பாட புத்தகங்கள்வியாபாரம் செய்பவர்கள் தங்களது கணக்கு நோட்டுகள்ஆகியவற்றை வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடுவார்கள் இதன்படி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் தினசரி கல்லூரிக்கு பேருந்துகளில் வந்து திரும்பப் பேருந்துகளில் வீடு திரும்பும் மகளிர் மாணவிகள் தாங்கள் வந்து செல்லும் பேருந்துகளுக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி கல்வி நிறுவனவளாகத்தில் நடைபெற்றது கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 150 பேருந்துகளும் ஒன்றாக நிறுத்தப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு பலூன் தோரணங்கள் கட்டி ஒவ்வொரு பேருந்திற்கு முன்னும் படையல் இட்டு சாம்பிராணி தூபம் காட்டி ஆயுதபூஜை சிறப்புடன் கொண்டாடினார்கள்செவ்வாய் முதல் ஞாயிறு முடிய விடுமுறை தினம் என்பதால் ஆயுத பூஜையை முன்கூட்டியே கொண்டாடும் வகையில் மாணவிகள் பூஜை செய்து வழிபட்டனர் இந்த பூஜை விழா நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி முதன்மை செயல் அலுவலர் சொக்கலிங்கம்முதன்மை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் செயல் இயக்குனர் குப்புசாமி ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர் விழாவை ஒட்டிகார்ட்டூன் பொம்மைவேடமற்றவர்களுடன் மாணவிகளுடன் சந்தோஷமாக மகிழ்ந்து விளையாடினார்கள்.
Next Story