திருச்செங்கோடு அருகே 150 ஆண்டு பழமையான கோவிலில் வினோத வழிபாடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புடவை காரி அம்மன்  திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் 150 ஆண்டுகளாக புடவையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வித்தியாசமான திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சித்தாளந்தூர் அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புடவைக்காரி அம்மன் கோயில் உள்ளது இந்தக் கோயில் வட்டூர் கிராமத்தில் இருந்தது அங்கிருந்து பூசாரிகள் சித்தளந்தூர் அருகே உள்ள தொட்டி பாளையத்தில் குடியேறியதால் அந்த அம்மன் தொட்டிபாளையம் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த புடவை காரி அம்மனின் திருவிழா நடைபெறுவது வழக்கம் புடவைக்காரி அம்மன் சிலையாக இல்லாமல் புடவையாக வைத்து இந்த கோயிலை சேர்ந்த குடும்பத்தினர் வழிபாடு செய்து வருகிறார்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புடவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு அந்த புடவை காவிரி ஆற்றில் நீரில் தூய்மை செய்யப்பட்டு அதனை காய வைத்து பூஜை செய்வது வழக்கம் இந்த புடவையை பெண்கள் தெய்வமாக வழிபாடு நடத்துகிறார்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் ஏராளமான  பக்தர்கள் வேண்டுதல் வைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் பட்சத்தில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று தொடங்கியது காவிரி ஆற்றங்கரையில் குளித்து சாமி புடவையை நீரில் நனைத்து சுத்தம் செய்து அதனை காய வைத்து பச்சை பந்தல் அமைத்து பூஜைகள் நடத்தி  மூன்று போலை பெட்டிகள் வைத்து அதில் பல்வேறு பூஜை பொருட்களை வைத்து தொட்டிபாளையம் கொண்டு சென்றனர் இன்று அந்த புடவையை மடித்து ஒரு பானையில் வைத்து அந்தப்  பானையை புற்றுமன்னால் மூடி வைத்து விடுவார்கள் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இந்த பானை மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோயில் வரலாறு குறித்து கோயில் நிர்வாகி ராஜா கூறும் போது  வட்டூர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் இருந்து வந்தது 1947 ஆம் ஆண்டு பூசாரிகள் தொட்டிபாளையம் வந்ததை தொடர்ந்து அம்மனை தொட்டிபாளையம் கொண்டு வந்தோம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அம்மனின் சேலையை எடுத்து காவிரி ஆற்றில் தூய்மை செய்து காய வைத்து போனை பெட்டிகளில் வைத்து பூஜைகள் செய்து மீண்டும் ஒரு பானையில் வைத்து அதனை புற்று மண் கொண்டு மூடி வைத்து விடுவோம் இதனை பெண் தெய்வமாக கருதி எங்கள்  பெண்கள் வழிபாடு நடத்துவார்கள் என்று கூறினார் வித்தியாசமான இந்த திருவிழா தொட்டிபாளையம் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
Next Story