இந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் 150 பேர் கைது

X
குமரி மாவட்டம் உண்ணாமலை கடை பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் 110 அடி உயர பாறையில் உள்ளது. கோவிலில் பத்திரகாளி அம்மன் சிலை, சித்தர் பீடம் இருந்தது. அப்பகுதி மக்கள் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் குலதெய்வ வழிபாடும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் தற்போது ரூ. 1.5 கோடியில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாரிகள் கோயில் சிலையை சிவலிங்கத்தை உடைத்து சித்தர் பீடத்தயும் உடைத்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி இரண்டு வாகனங்களில் வந்த விளவங்கோடு தாசில்தார் மற்றும் போலீசார் கோவிலை உடைத்து அங்கிருந்த பத்ரகாளி சிலை, சித்தர் பீட சிவலிங்கத்தை எடுத்து சென்றனர். இது ஒரு இதை கண்டித்து கோயில் பக்தர்கள் ஏற்கனவே மார்த்தாண்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காத இதை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நேற்று உண்ணாமலை கடை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஆனந்த தலைமை தாங்கினார். இதை அடுத்து போராட்டத்தை நடத்த விடாமல் போலீசார் தடை செய்தனர். பின்னர் 150 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
Next Story

