கரூர்-இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை யாத்திரை.
கரூர்-இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை யாத்திரை. சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு மாதங்கள் மத்திய அரசு இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி கொண்டாடி வருகிறது. இந்த போட்டிகள் இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து மையக் கருத்தாக வைத்து நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் இரண்டாவது கட்டமாக இன்று அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை நாடு முழுவதும் இளைஞர்கள் பங்கேற்கும் ஒற்றுமை யாத்திரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக கரூர் மை பாரத் கேந்திரா அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரச்சார நிகழ்ச்சியின் கணக்கு உதவியாளர் கணேசன் தெரிவிக்கும் போது நாளை கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் செயல்படும் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்போடு மாவட்ட இளையோர் அலுவலர் (பொ) ஜோஸ் பிரபாகர் தலைமையில் ஒற்றுமையாத்திரை கல்லூரியில் துவங்கி புலியூர் பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை நடைபெறும் எனவும் இந்த நிகழ்வை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துவக்கி வைக்க உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டியில் வெல்லும் மாணாக்கர்களை வரும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் அமைப்பு தினத்தன்று இரண்டு பாதயாத்திரைகள் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த இடமான கரம் சாத்திலிருந்து குஜராத் மாநிலம் கபாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை வரை 152 கிலோ மீட்டர் தூரம் தேசிய அளவிலான பாதயாத்திரை நடைபெறும் எனவும் இந்த பாதயாத்திரையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெற்றி பெறும் இளையோர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது இளையோர் மற்றும் மகளிர் கள அமைப்பாளர் செல்வம், தன்னார்வலர் சந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story




