மோடியின் 'தொழில் மகள்' நிகழ்ச்சியில் 1,500 பெண்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் பயிற்சி — வானதி சீனிவாசன் பேட்டி !

X
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற 'தொழில் மகள்' நிகழ்ச்சியில் 1,500 பெண்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு, தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., “தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும் போதும் மின்வெட்டு செய்வது திமுக அரசின் வழக்கம். எடப்பாடி பழனிச்சாமி பயணிக்கும் இடங்களிலும், அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ பயணத்திலும் இதுபோல் நடந்தது. பிரதமர் மோடியை விஜய் கம்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் தீவிர அரசியலில் இல்லாததால் இந்நிலைமை பற்றி தெரியாது,” என்றார். மீனவர் பிரச்சனை குறித்து அவர் மேலும் கூறியதாவது: “2004 முதல் 2014 வரை பலமுறை நான் மீனவர்களுக்காக போராடியிருக்கிறேன். ஆனால் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பே கிடையாது. இப்போது மோடி பிரதமராகி பத்து வருடமாக நிலைமை மாறி உள்ளது. மீனவர் பிரச்சனையில் விஜய் அப்டேட்டாக இல்லை என்பதை தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் கேட்க வேண்டியதை இப்போது கேட்கிறார்கள். அவர் அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டும்,” என்றார்.
Next Story

