தா.பழூரில் கனமழை காரணமாக தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 1500 ஏக்கர் எள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம். ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் அழக விவசாயிகள் கோரிக்கை.

X
அரியலூர் மே.25- ஜெயங்கொண்டத்தில் கனமழை காரணமாக தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் இழப்பிடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்* அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர் ஆகிய ஒன்றியங்கள் டெல்டா பகுதியாக உள்ளது தா.பழூர் பகுதிகளில் சம்பா அறுவடைக்குப் பிறகு எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர் அதன்படி தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சி பெருமாநத்தம், மேலக்குடிகாடு, கீழக்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மழை நீரானது எள் சாகுபடி பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் தேங்கி தற்போது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எள் பயிர்கள் அழுகிய நிலையிலும், அத்தோடு மட்டுமின்றி பயிர்கள் கருகி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலையில் தற்போது விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூபாய் 25000 இழப்பீடு கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என தமிழக அரசுக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

