ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 15,000 நிதியுதவி வழங்க வேண்டி மனு

X
தமிழகத்தில் உத்தேசமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சரக்கு வாகன ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களான ஓலா, உபர், ராபிட்டோ போன்றவைகளின் காரணத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் தொழில் மிகவும் நலிவடைந்து குடும்பங்கள் வறுமையில் வாழுகின்றது. ஆந்திரா அரசாங்கம் அத்தகையவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை "ஆட்டோ டிரைவர் சேவை" என்று திட்டத்தின் மூலமாக ரூ.15000 வழங்குகிறார்கள் அதேபோன்று தமிழகத்திலும் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூ.15000 நிதி உதவி வழங்கிட வேண்டி திண்டுக்கல் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Next Story

