உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 15.07.2025 முதல் 18.07.2025 வரை சிறப்பு முகாம்

X

பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் தேடி வரும் தன்னார்வலர்கள் வழங்கும் விண்ணப்ப படிவங்களை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 15.07.2025 முதல் 18.07.2025 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்திற்கான 08 முகாம்கள் 15.07.2025 அன்று (செவ்வாய் கிழமை) முதல் 18.07.2025 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும். முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் அரசுத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த விளக்க பிரசுரங்கள் ஆகியவை இதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக அந்தந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு வீடாக நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் 1 மற்றும் 2வது வார்டில் உள்ளவர்களுக்கு 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாதவி ரோட்டில் உள்ள NSK திருமண மண்டபத்திலும், 3 மற்றும் 4வது வார்டில் உள்ளவர்களுக்கு 17.07.2025 அன்று வியாழக்கிழமை எளம்பலூர் ரோட்டில் உள்ள கர்ணம் சகுந்தலா சுப்ரமணியம் திருமண மண்டபjதிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 1 முதல் 8 வார்டுகளுக்குட்பட்டவர்களுக்கு 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமையும், 9 முதல் 15 வார்டுகளுக்குட்பட்டவர்களுக்கு18.07.2025 அன்று வெள்ளிக்கிழமையும். அ.மேட்டூர் ரெட்டியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும். வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட பேரளி, சித்தளி, அசூர் ஊராட்சிகளுக்கு சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமையும், ஒதியம், மூங்கில்பாடி பெரியம்மா பாளையம் ஊராட்சிகளுக்கு மூங்கில்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 17.07.2025 அன்று வியாழக்கிழமையும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட எலந்தலப்பட்டி, டி.களத்தூர் ஊராட்சிகளுக்கு 16.07.2025 புதன்கிழமை எலந்தலப்பட்டி துரைசாமி ரெட்டியார் திருமண மண்டபத்திலும், நக்கசேலம், சிறுவயலூர் ஊராட்சிகளுக்கு 18.07.2025 அன்று வெள்ளிக்கிழமை நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் தேடி வரும் தன்னார்வலர்கள் வழங்கும் விண்ணப்ப படிவங்களை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story