முனியப்பன் சுவாமிக்கு 151 ஆடுகள் நேர்த்திக்கடன்
பென்னாகரம் தொகுதி ஏரியூரை சேர்ந்த தங்கராஜ் என்ற பக்தர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகாமல் பி.அக்ரகாரம் கிராமத்தில் உள்ள முனியப்பன் சுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அவரது உடல்நிலை சரியான நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று செவ்வாய்க்கிழமை தனது வேண்டுதலை நிறைவேற்ற 151 ஆடுகள் வெட்டி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்தார் மேலும் அசைவ உணவு சமைத்து பக்தர்கள் அனைவருக்கும் பரிமாறினார் இதனால் அப்பகுதியில் பக்தி பரவசம் நிலவியது
Next Story






