தாந்தோணி மலை வ.உ சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா.

தாந்தோணி மலை வ.உ சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா.
தாந்தோணி மலை வ.உ சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா. சுதந்திரப் போராட்ட வீரரும் சிறையில் செக்கிழுத்தவரும் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் தாந்தோனி மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட வ உ சி பேரவை சார்பில் மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அங்கு பசுபதி சூர்யா. வே. கதிரவன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ.உசிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.
Next Story