ராமநாதபுரம் வ.உ.சி154 ஜெயந்தி விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரண்மனையில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் தலைவர் ஜெயபாண்டியன், வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனர் அண்ணா சரவணன், மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய ராஜா நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நகர் செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பா.ஜ.க., தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் மாநில செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில பொதுச்செயலாளர் வேலு மனோகரன், மாவட்டத் தலைவர் கேலக்ஸி பாலா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலன், ராமநாதபுரம் தமிழக வெற்றி கழக நகர் இளைஞர் அணி செயலாளர் எஸ் ஆர் எம் குணசீலன் நகர் செயலாளர் ராஜ்குமார் கேகே உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பேசினர் வெள்ளாளர் கூட்டு அமைப்பின் நிறுவனத் தலைவர் சரவணன் கூறுகையில் ராமநாதபுரத்தில் கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் திருவுருவ வெங்கல சிலை அமைக்க வேண்டும் இதை வலியுறுத்தி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
Next Story





