காந்தியடிகளின் 156 வது பிறந்தநாள் விழா நாலாவது வார்டு பக்தவச்சலம் நகர் பகுதிமற்றும் திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைகளுக்குமாலை அணிவித்து மரியாதை
Tiruchengode King 24x7 |2 Oct 2025 4:14 PM ISTதேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாளை ஒட்டி பக்தவசலம் நகர் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கும் நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கே எஸ் மூர்த்தி நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுஆகியோர் மாலை அணிவித்தனர்
2.10.25 தேசத்தந்தை காந்தியடிகளின் 156 வது பிறந்த நாள் இதனை கொண்டாடும் விதமாக திருச்செங்கோடு நகராட்சி நாலாவது வார்டு பக்தவத்சலம் நகர்& அண்ணா நகர் ஊர்நல கமிட்டியின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.நாலாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தவச்சலம் நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலைக்குநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் K. S. மூர்த்தி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆர். நடேசன்கிழக்கு நகர பொறுப்பாளர் நகர மன்ற துணைத் தலைவர் கார்திகேயன், மக்கள் மேற்கு மாவட்ட மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதே போல்நகராட்சி வளாகத்தில் உள்ள கண்ணா சிலைக்கு மேயர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நகராட்சி பொறியாளர் சரவணன் நகர மன்ற உறுப்பினர்கள் செல்லம்மாள் தேவராஜன், சினேகா ஹரிகரன், புவனேஸ்வரி உலகநாதன், அடுப்பு ரமேஷ்திவ்யா வெங்கடேஸ்வரன், ராஜா, செல்வி ராஜவேல்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமையில் தாமாகவினர் பலரும் கலந்து கொண்டு காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Next Story


