சிறுமுகையில் 158 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல் !

X
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழிகாட்டுதலில், சிறுமுகை காவல்துறையினர் நேற்று ஜடையம்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 158 கிலோ 550 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜிஷ்ணு (28) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Next Story

