திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ₹1.59 கோடி உண்டியல் காணிக்கை
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு - 1,59 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தகவல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுதினமும் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், தெலுங்கானா மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனாக காணிக்கையாக தங்கம், பணம் ஆகியவற்றை உண்டியலில் செலுத்துகின்றனர் இவற்றினை எண்ணுவதற்கு இந்த சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில் திருக்கோயில் ஊழியர்கள் திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்கள் உண்டியல் பணத்தை இதனை மலைக்கோவிலில் வசந்த மண்டபத்தில், எண்ணப்பட்டது இதன் விவரம் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளனர் 1) பணம் ரூபாய்-1,59,71,698/- கோடி 2) தங்கம்-921- கிராம் 3) வெள்ளி- 11,012=கிராம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியவை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்..
Next Story






