சங்கரன்கோவிலில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்: 16 போ் கைது

சங்கரன்கோவிலில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்: 16 போ் கைது
இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்: 16 போ் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தேரடித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கைப் பாா்வையிடச் சென்ற இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில செயலா் குற்றாலநாதன் ஆகியோரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். கோட்டப் பொறுப்பாளா் ஆறுமுகச்சாமி, மாவட்டச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, நகரத் தலைவா் பாடாலிங்கம், செயலா் திருமலைக்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெரியகாசிப்பாண்டியன் உள்ளிட்ட 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Next Story