ராயல் சர்வதேசப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா
Komarapalayam King 24x7 |13 Jan 2025 2:23 PM GMT
குமாரபாளையம் ராயல் சர்வதேசப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராயல் சர்வதேசப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஈரோடு அச்சுதா மருத்துவமனை நிர்வாக தலைவரும், கண் மருத்துவருமான பாலசுப்ரமணியம் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு சாதனைகள் புரிந்த, விடுமுறை எடுக்காத, பல கலை நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தாளாளர் அன்பழகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதாஆனந்தன், பள்ளி முதல்வர் ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் குத்துவிளக்கேற்றினர். பரத நாட்டியம், புராண நாட்டிய நாடகம், மோனோ ஆக்டிங், மேற்கத்திய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஸ்ரீவாரி அறக்கட்டளையின் அங்கத்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story